/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
செம்பரம்பாக்கம் ஏரி கரையில் குப்பை கொட்டி எரிப்பு
/
செம்பரம்பாக்கம் ஏரி கரையில் குப்பை கொட்டி எரிப்பு
ADDED : ஆக 18, 2024 11:51 PM

பூந்தமல்லி: செம்பரம்பாக்கம் ஏரியின் கரை அருகே குப்பையை கொட்டி எரிப்பதால், அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது.
சென்னையின் குடிநீர் ஆதாரமான செம்பரம்பாக்கம் ஏரியானது திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்ட எல்லையில், 6,300 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.
இந்த ஏரியில் தொழிற்சாலை, குடியிருப்பு கழிவுகள் கலந்து, தண்ணீர் மெல்ல மெல்ல மாசடைந்து வருகிறது.
இந்நிலையில், பூந்தமல்லி அருகே மேப்பூர் ஊராட்சியில் சேகரமாகும் குப்பை, அதே பகுதியில் உள்ள செம்பரம்பாக்கம் ஏரிக்கரையின் கீழ் கொட்டப்படுகிறது. குப்பையிலுள்ள பிளாஸ்டிக் பொருட்கள் காற்றில் அடித்துச் செல்லப்பட்டு, ஏரியில் விழுகிறது.
மேலும், குப்பையைக் கொட்டி அப்பகுதியிலேயே எரிப்பதால், சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.
இந்த பகுதியில் குப்பை கொட்டி எரிப்பதை தடை செய்ய வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.