ADDED : ஜூலை 09, 2024 11:59 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்:வாலாஜாபாத் அடுத்த, பழையசீவரம் லட்சுமி நரசிம்ம பெருமாள் கோவில் உள்ளது. இங்கு, பிரம்மோற்சவம் கடந்த, 7ம் தேதி கொடி ஏற்றத்துடன் துவங்கியது.
பிரம்மோற்சவத்தின், 5வது நாளான நாளை, கருட வாகனத்தில் லட்சுமி நரசிம்மர் எழுந்தருளி, வீதியுலா வர உள்ளார்.
திருவிழாவின், 7வது நாளான ஜூலை- 13ம் தேதி சப்பரத் திருத்தேர் உற்சவம் நடைபெற உள்ளது.