/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பொது கழிப்பறை சீரமைக்க அரசு நகரினர் வலியுறுத்தல்
/
பொது கழிப்பறை சீரமைக்க அரசு நகரினர் வலியுறுத்தல்
ADDED : பிப் 10, 2025 01:04 AM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சி, ஓரிக்கை அரசு நகரில், எட்டு ஆண்டுகளுக்கு முன், 9.80 லட்சம் ரூபாய் செலவில் நவீன வசதிகளுடன் கூடிய பொதுகழிப்பறை கட்டம் கட்டப்பபட்டது. இதை, அப்பகுதி வாசிகள் கழிப்பறையை பயன்படுத்தி வந்தனர்.
ஐந்து ஆண்டுகளுக்கு முன், கழிப்பறையின் தண்ணீர் தேவைக்ககாக, ஆழ்துளை குழாயில் அமைக்கப்பட்ட நீர்மூழ்கி மின்மோட்டார் பழுதடைந்தது. இந்த மோட்டாரை மாநகராட்சி நிர்வாகம் சீரமைக்கவில்லை. தண்ணீர் வசதி இல்லாததால், கழிப்பறையை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.
லட்சக்கணக்கான ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட பொது கழிப்பறை செடி, கொடிகள் வளர்ந்து பயன்பாடின்றி வீணாகி வருகிறது. எனவே, மின்மோட்டாரை சீரமைப்பதோடு, கழிப்பறையை புதுப்பித்து மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என, அப்பகுதிவாசிகள் வலியுறுத்தி உள்ளனர்.