/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மயான கொள்ளை திருவிழா மாத்துார் கிராமத்தில் விமரிசை
/
மயான கொள்ளை திருவிழா மாத்துார் கிராமத்தில் விமரிசை
மயான கொள்ளை திருவிழா மாத்துார் கிராமத்தில் விமரிசை
மயான கொள்ளை திருவிழா மாத்துார் கிராமத்தில் விமரிசை
ADDED : பிப் 28, 2025 12:51 AM

ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார் அருகே, மாத்துார் கிராமத்தில் உள்ள அங்காளபரமேஸ்வரி கோவிலில், 45 ம் ஆண்டு மயான கொள்ளை திருவிழா இம்மாதம் 23 தேதி காப்பு கட்டுதலுடன் துவங்கியது. 25ம் தேதி இரவு, காப்பு கட்டி விரதமிருந்த பக்தர்கள், பூக்குழி இறங்கி தீ மிதித்து நேர்த்திகடன் செலுத்தினர். தொடர்ந்து, பூ கரக புறப்பாடு, மகா அபிஷேகம் நடந்தது.
நேற்று காலை, அம்மனுக்கு 108 பால் குடம் அபிேஷகத்தை தொடந்து, காளி வேடமணிந்த பக்தர், சுடுகாடு பகுதியில் அமைக்கப்பட்ட சூரனை வதம் செய்தார். இரவு, அம்மன் தேர் வீதி உலா நிழ்ச்சி நடைப்பெற்றது. இதில், கிராம மக்கள் திரளானோர் பங்கங்கேற்று அம்மனை வணங்கினர்.