/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காஞ்சியில் 22ல் 'மாஜி' படைவீரர் குறைதீர் கூட்டம்
/
காஞ்சியில் 22ல் 'மாஜி' படைவீரர் குறைதீர் கூட்டம்
ADDED : ஆக 13, 2024 08:54 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் வளாக கூட்டரங்கில், மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி தலைமையில், வரும் ஆக.22ம் தேதி, மாலை 3:00 மணிக்கு, முன்னாள் படைவீரர் சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம், நடைபெற உள்ளது.
எனவே, முன்னாள் படைவீரர் சிறப்புக் குறைதீர்வு நாள் கூட்டத்தில், முன்னாள் படைவீரர்கள் மற்றும் முன்னாள் படைவீரர்களைச் சார்ந்தோர்கள் தங்களின் அடையாள அட்டையுடன் பங்கேற்கலாம்.
தங்களின் மனுக்களை இரட்டை பிரதிகளில் காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டரிடம் நேரடியாக வழங்கலாம் என, கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார்.