/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ராமானுஜர் கோவிலில் குருபுஷ்ய உற்சவம்
/
ராமானுஜர் கோவிலில் குருபுஷ்ய உற்சவம்
ADDED : பிப் 10, 2025 01:15 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுாரில் ஆதிகேசவ பெருமாள் மற்றும் பாஷ்யகார சுவாமி கோவில் அமைந்துள்ளது. வைணவ மகான் ராமானுஜரின் அவதார தலமாக விளங்கும் இங்கு, ராமானுஜர் தானுகந்த திருமேனியாக பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
இக்கோவிலில் ஒவ்வொரு மாதமும் திருவாதிரை உற்சவம் நடைபெறுவது வழக்கம். அதன்படி, நேற்று காலை 5:00 மணிக்கு விஸ்வரூபம் நடந்தது. காலை 7:00 மணிக்கு பல்லாக்கு புறப்பாடு, மதியம் 12:00 மணிக்கு திருமஞ்சனம் நடந்தது.
மாலை 7:00 மணிக்கு ஹம்சவாகனம் புறப்பாடு நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று ராமானுஜரை வழிபட்டனர்.

