/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சாலையோர குப்பை கழிவு சேர்க்காடில் சுகாதார சீர்கேடு
/
சாலையோர குப்பை கழிவு சேர்க்காடில் சுகாதார சீர்கேடு
சாலையோர குப்பை கழிவு சேர்க்காடில் சுகாதார சீர்கேடு
சாலையோர குப்பை கழிவு சேர்க்காடில் சுகாதார சீர்கேடு
ADDED : பிப் 27, 2025 12:35 AM

வாலாஜாபாத்:வாலாஜாபாதில் இருந்து ரயில்வே மேம்பாலம் வழியாக ஒரகடம் செல்லும் சாலை உள்ளது. இச்சாலையில், வாலாஜாபாத் பேரூராட்சி மூன்றாவது வார்டில் சேர்க்காடு பகுதி உள்ளது.
இப்பகுதியைச் சேர்ந்த குடியிருப்பு வாசிகள் மற்றும் கடை வைத்திருப்போர் சிலர், தங்களது வீடு மற்றும் கடைகளில் இருந்து வெளியேற்றப்படும் குப்பை கழிவுகளை, சேர்க்காடு சாலையோரம் கொட்டி செல்கின்றனர்.
இந்த குப்பை கழிவுகளில் இறைச்சி கழிவுகள் மற்றும் காய்கறி கழிவுகளும் கலந்திருப்பதால், துர்நாற்றம் வீசுகிறது. மேலும், இப்பகுதியில் வெளிமாவட்டங்களைச் சேர்ந்தோர், வாடகை வீடுகளில் வசிக்கின்றனர்.
இவர்களில் சிலர், வீட்டு குப்பையை முறையாக துாய்மை பணியாளர்களிடம் வழங்காமல், பிளாஸ்டிக் கவரில் அடைத்து, சாலையோரங்களில் வீசி செல்வதாக கூறப்படுகிறது. இவ்வாறு குவியும் குப்பையால், இச்சாலையில் நடந்து செல்லும் பாதசாரிகள் முகம்சுளிக்கின்றனர்.
எனவே, சுகாதார சீர்கேடு ஏற்படுத்தும் வகையிலான குப்பை கழிவுகளை அகற்றுவதோடு, சாலையோரத்தில் தொடர்ந்து குப்பை குவியாமல் பராமரிக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

