/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மத்திய அமைச்சர் அமித்ஷா வருகை கனரக வாகனங்களுக்கு தடை
/
மத்திய அமைச்சர் அமித்ஷா வருகை கனரக வாகனங்களுக்கு தடை
மத்திய அமைச்சர் அமித்ஷா வருகை கனரக வாகனங்களுக்கு தடை
மத்திய அமைச்சர் அமித்ஷா வருகை கனரக வாகனங்களுக்கு தடை
ADDED : மார் 08, 2025 01:04 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்:ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் மத்திய தொழில் பாதுகாப்பு படை தின விழாவில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று பங்கேற்றார். அவரின் வருகையொட்டி, காஞ்சிபுரம்-அரக்கோணம் சாலையில், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
காஞ்சிபுரம், ராணிப்பேட்டை ஆகிய இரு மாவட்டங்களின் எல்லையாக கருதப்படும், படுநெல்லியில் உள்ள தற்காலிக வாகன சோதனை சாவடியை கடந்து சென்ற, கன ரக வாகனங்கள் சாலை ஓரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. மத்திய அமைச்சர் அரக்கோணம் வந்து சென்ற பின் அரக்கோணம் வழியாக கனரக வாகனங்கள் செல்ல அனுமதி அளிக்கப்பட்டது.