/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
குடிநீர் வினியோகத்திற்கு முக்கியத்துவம்: கலெக்டர்
/
குடிநீர் வினியோகத்திற்கு முக்கியத்துவம்: கலெக்டர்
ADDED : மே 10, 2024 12:57 AM

உத்திரமேரூர், உத்திரமேரூர் பேரூராட்சியில், 'அம்ருத்' திட்டத்தின் கீழ், 20.90 கோடி ரூபாய் செலவில் குடிநீர் திட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இப்பணிகளின் நிலவரம் குறித்து காஞ்சிபுரம் மாவட்ட கண்காணிப்பாளர் செந்தில்குமார் மற்றும் காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி ஆகியோர் நேற்று நேரில் பார்வையிட்டனர்.
இதையடுத்து, உத்திரமேரூரில் உள்ள பால் குளிரூட்டு நிலையம் மற்றும் கால்நடை மருந்தகம் போன்றவற்றின் செயல்பாடுகள் குறித்து பார்வையிட்டனர்.
அதை தொடர்ந்து, உத்தரமேரூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட ராவத்தநல்லுார், மேல்பாக்கம், சிலாம்பாக்கம், மருதம், ஆதவப்பாக்கம் ஆகிய ஊராட்சிகளில் நடைபெறும் திட்ட பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.
அரசு தொகுப்பு வீட்டுக்கான கட்டுமான பணிகள், நபார்டு திட்ட பணிகள் மற்றும் மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் பல்வேறு பணிகள் குறித்து ஆய்வு செய்தனர்.
தற்போது, கோடைக்காலம் நிலவுவதால் குடிநீர் வினியோகத்திற்கு முக்கியத்துவம் அளித்து பணிகள் மேற்கொள்ள, பேரூராட்சி மற்றும் ஊராட்சி நிர்வாகிகளிடத்தில் அறிவுறுத்தப்பட்டது.
மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ் மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட இயக்குனர் ஜெயகுமார் உட்பட பலர் உடனிருந்தனர்.