/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பறிமுதல் வாகனங்கள் ஆண்டுகணக்கில் துருப்பிடித்து நாசம்
/
பறிமுதல் வாகனங்கள் ஆண்டுகணக்கில் துருப்பிடித்து நாசம்
பறிமுதல் வாகனங்கள் ஆண்டுகணக்கில் துருப்பிடித்து நாசம்
பறிமுதல் வாகனங்கள் ஆண்டுகணக்கில் துருப்பிடித்து நாசம்
ADDED : செப் 04, 2024 01:23 AM

ஸ்ரீபெரும்புதுார்:காஞ்சிபுரம் மாவட்ட குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு துறை ஆய்வாளர் அலுவலகம், ஸ்ரீபெரும்புதுாரில் இயங்கி வருகிறது.
மாவட்டம் முழுதும் சட்ட விரோதமாக ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபவர்களை கண்காணித்து கைது செய்து வருகின்றனர்.
அவ்வாறு ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபடுபவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்படும் வாகனங்கள் ஆய்வாளர் அலுவலகம் அருகே உள்ள காலி மனையில் நிறுத்தி வைக்கப்படுகின்றன.
அவை பல ஆண்டுகளாக வெயில், மழையில் வீணாகி வருகின்றன.
மண்ணோடு மண்ணாக துருப்பிடிக்கும் வாகனங்களால் அப்பகுதியில் பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. பறிமுதல் செய்யப்படும் வாகனங்களை ஏலம் விடாமல் வைத்திருப்பதால், வாகனங்கள் வீணாவதுடன், ஏலம் விடுவதன் வாயிலாக அரசுக்கு கிடைக்கும் வருவாயும் வீணாகிறது.
எனவே, துருப்பிடித்து வீணாகும் வாகனங்களை ஏலம் விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.