/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சாலவாக்கத்தில் அடிக்கடி மின் தடை கண்ணாமூச்சி ஆட்டம் காட்டிய மின்சாரம்
/
சாலவாக்கத்தில் அடிக்கடி மின் தடை கண்ணாமூச்சி ஆட்டம் காட்டிய மின்சாரம்
சாலவாக்கத்தில் அடிக்கடி மின் தடை கண்ணாமூச்சி ஆட்டம் காட்டிய மின்சாரம்
சாலவாக்கத்தில் அடிக்கடி மின் தடை கண்ணாமூச்சி ஆட்டம் காட்டிய மின்சாரம்
ADDED : ஏப் 02, 2024 02:18 AM

காஞ்சிபுரம், த்திரமேரூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட சாலவாக்கத்தில் 4,000த்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.இப்பகுதியில் நேற்று, காலை 9:30 மணியில் இருந்து, அடிக்கடி மின்தடை ஏற்பட்டதால், கிராமத்தினர் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர்.
இதுகுறித்து சாலவாக்கத்தினர் சிலர் கூறியதாவது:
காலை 9:30 மணிக்கு மேல், திடீரென மின்தடை ஏற்பட்டது. 10 நிமிடத்தில் மீண்டும் மின்வினியோகம் சீரானது. அடுத்த 5 நிமிடத்தில் மீண்டும் மின்சாரம் தடைபடுவதும், அடுத்த 10 நிமிடத்தில் மீண்டும் மின்சாரம் வருவதும் என, மாலை 5:30 மணி வரை மின்சாரம் கண்ணாமூச்சி ஆட்டம் காட்டியது.
இதனால், தேர்வுக்கு படிக்கும் மாணவ- - மாணவியர் படிக்க முடியாமல் தவித்தனர். கோடை வெயில் காரணமாக, மின்விசிறியை இயக்க முடியாததால் புழுக்கம் தாங்க முடியாமல் முதியோர், நோயாளிகள் பரிதவித்தனர்.
அடிக்கடி மின்தடை ஏற்பட்டதால் மின்சாதனங்களும் விரைவில் பழுதாகும் சூழல் உள்ளது. தேர்வு நேரத்தில் இதுபோன்று அடிக்கடி மின்தடை ஏற்படுவதால், மாணவர்களின் தேர்ச்சி விகிதம் பாதிக்கப்படும் சூழல் உள்ளது. எனவே, தேர்வு முடியும் வரை மின்தடை ஏற்படாமல் இருக்க மின்வாரியத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதுகுறித்து சாலவாக்கம் பகுதி மின்வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில், ''பிரதான மின் ஒயரில் மரக்கிளை ஒடிந்து விழுந்ததால், மின்தடை ஏற்பட்டது. அவை சரி செய்யப்பட்டு மின்சாரம் சீராக வழங்கப்பட்டது,'' என்றார்.

