/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சிப்காட் குடிநீர் விநியோக நிலையத்தில் தொழிற்சாலை வாகனங்கள் அத்துமீறல்

ADDED : மார் 06, 2025 12:32 AM

ஸ்ரீபெரும்புதுார்:ஒரகடம் சிப்காட் தொழிற்பூங்காவில் உள்ள தொழிற்சாலைகளுக்கு, குடிநீர் பற்றாக்குறையை பூர்த்தி செய்யும் வகையில், சிப்காட் நிறுவனத்தின் வாயிலாக, டேங்கர் லாரிகளில் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.
இதற்காக, வைப்பூர் செல்லும் சாலையில் உள்ள சிப்காட் குடிநீர் விநியோக நிலையத்தில் ராட்சத தண்ணீர் தொட்டி, மின் மோட்டார்கள் பொருத்தப்பட்டுள்ளது. தற்போது, இந்த குடிநீர் விநியோக நிலையம் செயல்பாட்டில் இல்லாமல் உள்ளது.
இதனால், அருகில் உள்ள தொழிற்சாலைகளுக்கு ஊழியர்களை ஏற்றி கொண்டு வரும், வேன், கார் உள்ளிட்ட தொழிற்சாலை வாகனங்களை இப்பகுதியில் நிறுத்துகின்றனர்.
இதன் அருகிலேயே சிப்காட் வாகன நிறுத்த முனையம் இருந்தும், அங்கு கட்டணம் செலுத்தி வாகனத்தை நிறுத்துவதை தவிர்த்து, இந்த நிலையத்தில் அத்துமீறி நிறுத்துகின்றனர்.
மேலும், இரவு நேரங்களில் அப்பகுதியில் வாகனங்களை நிறுத்தி, மது அருந்துவதாக குற்றசாட்டு எழுந்துள்ளது.
எனவே, சிப்காட் போலீசார் அப்பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.