/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
உத்திரமேரூர் --- காஞ்சிபுரம் இடையே கூடுதல் பஸ் இயக்க வலியுறுத்தல்
/
உத்திரமேரூர் --- காஞ்சிபுரம் இடையே கூடுதல் பஸ் இயக்க வலியுறுத்தல்
உத்திரமேரூர் --- காஞ்சிபுரம் இடையே கூடுதல் பஸ் இயக்க வலியுறுத்தல்
உத்திரமேரூர் --- காஞ்சிபுரம் இடையே கூடுதல் பஸ் இயக்க வலியுறுத்தல்
ADDED : ஆக 12, 2024 10:24 PM

காஞ்சிபுரம் : உத்திரமேரூர் - காஞ்சி புரம் சாலையில் உள்ள ஆணைபள்ளம் கிராமத்தில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, திருப்புலிவனத்தில், அரசு மேல்நிலைப் பள்ளி மற்றும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி இயங்கி வருகின்றன.
உத்திரமேரூர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த நுாற்றுக்கணக்கான மாணவ - மாணவியர் ஆணைபள்ளம் மற்றும் திருப்புலிவனத்தில் உள்ள அரசு பள்ளி மற்றும் கல்லுாரிக்கு, தினமும் அரசு பேருந்தில் சென்று வருகின்றனர்.
இந்நிலையில், காலை மற்றும் மாலை நேர 'பீக்ஹவரில்' உத்திரமேரூர் -- காஞ்சிபுரம் இடையே போதுமான அரசு பேருந்து இயக்கப்படுவதில்லை என, புகார் எழுந்துள்ளது.
இதனால், காலை, மாலை நேரத்தில், உத்திரமேரூர் -- காஞ்சிபுரம்இடையே செல்லும் அரசு பேருந்துகளில் நிற்கஇடமில்லாததால், பள்ளி, கல்லுாரி மாணவர்கள் படிகளில் தொங்கியபடி ஆபத்தான முறையில் பேருந்தில் பயணிக்கின்றனர். இதனால், மாணவர்கள் தவறி விழுந்து விபத்தில் சிக்கும் சூழல் உள்ளது.
எனவே, காலை மற்றும்மாலை நேரத்தில்,உத்திரமேரூர் - -காஞ்சி புரம் இடையே இருவழித் தடங்களிலும் கூடுதல் அரசு பேருந்துகள் இயக்க, அரசு போக்குவரத்துகழகம், காஞ்சிபுரம் மண்டல நிர்வாகம், நடவடிக்கை எடுக்கவேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

