/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காஞ்சி ---- தி.நகர் இடையே நிறுத்தப்பட்ட 'ஏசி' பஸ் மீண்டும் இயக்க வலியுறுத்தல்
/
காஞ்சி ---- தி.நகர் இடையே நிறுத்தப்பட்ட 'ஏசி' பஸ் மீண்டும் இயக்க வலியுறுத்தல்
காஞ்சி ---- தி.நகர் இடையே நிறுத்தப்பட்ட 'ஏசி' பஸ் மீண்டும் இயக்க வலியுறுத்தல்
காஞ்சி ---- தி.நகர் இடையே நிறுத்தப்பட்ட 'ஏசி' பஸ் மீண்டும் இயக்க வலியுறுத்தல்
ADDED : ஏப் 16, 2024 06:48 AM
காஞ்சிபுரம், : காஞ்சிபுரத்தில் இருந்து, சென்னை கோயம்பேடிற்கு, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம், விழுப்புரம் கோட்டம், காஞ்சிபுரம் மண்டலம் சார்பில், சாதாரண பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
இருப்பினும், 'ஏசி' பேருந்து இயக்க வேண்டும் என, பயணியர் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, சென்னை மாநகர போக்குவரத்து கழகம் சார்பில், ஏழு ஆண்டுகளுக்கு முன் தடம் எண்: 576 என்ற, 'ஏசி' பேருந்து, காஞ்சிபுரம் -- சென்னை, தி.நகர் இடையே இயக்கப்பட்டது.
கோடை காலத்தில் குளுகுளு பயணம் என்பதால், பயணியரிடையே வரவேற்பு அதிகமாக இருந்தது. இந்நிலையில், 2020ல் கொரோனா ஊரடங்கின்போது காஞ்சிபுரம் -- சென்னை, தி.நகர் இடையே இயக்கப்பட்ட, 'ஏசி' பேருந்து சேவையை, சென்னை மாநகர போக்குவரத்து கழகம் நிறுத்திவிட்டது.
அதன்பின், மீண்டும், 'ஏசி' பேருந்து சேவையை துவக்கவில்லை. தற்போது அக்னி நட்சத்திரம் எனப்படும், கத்திரி வெயில் துவங்குவதற்கு முன்பே கோடை வெயில் கொளுத்தி வருவதால், காஞ்சியில் இருந்து சென்னைக்கு சாதாரண பேருந்தில் சென்று வருவோர் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
எனவே, கொரோனா ஊரடங்கின்போது நிறுத்தப்பட்ட, காஞ்சிபுரம் -- சென்னை தி.நகர் வரை இயக்கப்பட்ட தடம் எண்: 578 'ஏசி' பேருந்தை மீண்டும் இயக்க, சென்னை மாநகர போக்குவரத்து கழகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பயணியர் வலியுறுத்தி உள்ளனர்.
இதுகுறித்து சென்னை மாநகர போக்குவரத்து கழக அதிகாரி ஒருவர் கூறுகையில், ''சென்னை, தி.நகர் -- காஞ்சிபுரம் இடையே இயக்கப்பட்டு வந்த, 'ஏசி' பேருந்து மீண்டும் இயக்குவது குறித்து ஆலோசித்து முடிவு செய்யப்படும்,'' என்றார்.

