/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பூசிவாக்கம் மயானத்திற்கு செல்ல கான்கிரீட் சாலை அமைக்க வலியுறுத்தல்
/
பூசிவாக்கம் மயானத்திற்கு செல்ல கான்கிரீட் சாலை அமைக்க வலியுறுத்தல்
பூசிவாக்கம் மயானத்திற்கு செல்ல கான்கிரீட் சாலை அமைக்க வலியுறுத்தல்
பூசிவாக்கம் மயானத்திற்கு செல்ல கான்கிரீட் சாலை அமைக்க வலியுறுத்தல்
ADDED : மார் 13, 2025 01:24 AM

வாலாஜாபாத்:வாலாஜாபாத் ஒன்றியத்திற்கு உட்பட்டது பூசிவாக்கம் கிராமம். இக்கிராமத்தில், சடலங்களை அடக்கம் செய்வதற்கான மயானம், அப்பகுதி விவசாய நிலங்களையொட்டி கல்லுக்குட்டை குளம் அருகே உள்ளது.
இந்த கல்லுக்குட்டை குளத்தையொட்டி உள்ள ஒத்தையடி பாதையை பயன்படுத்தி, இப்பகுதியினர் மயானத்திற்கு சென்று வருகின்றனர். மழைக்காலங்களில், அந்த ஒத்தையடிப் பாதை சகதியாக காணப்படும்.
அச்சமயங்களில் மயானத்திற்கு சடலங்களை எடுத்து செல்ல வாகனத்தை பயன்படுத்த முடியாமலும், நடந்து செல்வதிலும், அப்பகுதியினர் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.
எனவே, பூசிவாக்கம் மயானத்திற்கு செனறுவர வசதியாக, கல்லுக்குட்டை குளம் துவங்கி, மயானம் வரையிலான ஒத்தையடிப் பாதையை, கான்கிரீட் சாலையாக சீரமைத்து தர அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.