/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கழிவுநீர் கால்வாய் அமைக்க வலியுறுத்தல்
/
கழிவுநீர் கால்வாய் அமைக்க வலியுறுத்தல்
ADDED : ஆக 27, 2024 12:51 AM

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட டெம்பிள் சிட்டியில், 500க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதியில் மழைநீர் மற்றும் வீட்டு உபயோக கழிவுநீர் வெளியேறும் வகையில், வடிகால்வாய் வசதி இல்லை.
இதனால், வீட்டு உபயோக கழிவுநீரை, வீட்டில் காலியாக உள்ள இடத்தில் தோட்டம் அமைத்து, செடி, கொடிகளுக்கு விடுகின்றனர். இடவசதி இல்லாதவர்கள் வீட்டு உபயோக கழிவுநீரை சாலையில் விடவேண்டிய நிலை உள்ளது. ஒரே இடத்தில் கழிவுநீர் தேங்கி நிற்பதால், இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை உள்ளது.
எனவே, டெம்பிள் சிட்டியில் வீட்டு உபயோக கழிவுநீர் மற்றும் மழைநீர் வெளியேறும் வகையில், வடிகால்வாய் வசதி ஏற்படுத்த வேண்டும் என, 'டெம்பிள் சிட்டியினர்' வலியுறுத்தி உள்ளனர்.

