/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
உத்திரமேரூரில் சாலை பணியாளர்களை கூடுதலாக நியமிக்க வலியுறுத்தல்
/
உத்திரமேரூரில் சாலை பணியாளர்களை கூடுதலாக நியமிக்க வலியுறுத்தல்
உத்திரமேரூரில் சாலை பணியாளர்களை கூடுதலாக நியமிக்க வலியுறுத்தல்
உத்திரமேரூரில் சாலை பணியாளர்களை கூடுதலாக நியமிக்க வலியுறுத்தல்
ADDED : செப் 09, 2024 05:31 AM
உத்திமேரூர் : உத்திரமேரூர் ஒன்றியத்தில், 73 ஊராட்சிகளில் 200க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளடங்கிஉள்ளன. மேலும், உத்திரமேரூர் பேரூராட்சியில், 18 கிராமங்கள் உள்ளன. உத்திரமேரூர் ஒன்றியம் மற்றும் பேரூராட்சி பகுதிகளில், ஒன்றிய கட்டுப்பாட்டிலான சாலைகள் மற்றும் நெடுஞ்சாலைகள் உள்ளன.
இச்சாலைகளில் படிந்த மண் குவியல்கள் அகற்றம் செய்தல், சாலையோர புதர்கள் மற்றும் மரக்கிளைகளை அப்புறப்படுத்துதல் போன்ற பணிகளில் சாலை பணியாளர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
இவ்வாறான சாலைபராமரிப்பு பணிகள் மேற்கொள்ள உத்திரமேரூர் ஒன்றியத்தில் கடந்த ஆண்டுகளில் 20ல் இருந்து, 30 பணியாளர்கள் இருந்தனர்.
நாளடைவில் பணி ஓய்வு மற்றும் பதவி உயர்வு, பணியாளர்கள் இறப்பு போன்றவையால் சாலை பணியாளர்கள் எண்ணிக்கை குறைந்தது. அப்பணியாளர்களுக்கு மாற்றாக புதிய பணியாளர்கள் நியமிக்கப்படாமல் காலியாக இருந்து வருகிறது.
இதனால், தற்போதுஉத்தரமேரூர் ஒன்றியத்தில், 10 பேர் மட்டுமே சாலை பணியாளர்களாக உள்ளனர்.
இப்பணியாளர்களை கொண்டு ஒன்றியம் முழுக்க உள்ள அனைத்து சாலைகளிலும் பராமரிப்பு பணி மேற்கொள்வது சவாலாக உள்ளதோடு, பணியாளர்களும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
மேலும், பணியின் போது பணியாளர்களுக்கு தேவையான உபகரண பொருட்கள், பாதுகாப்பு கவசங்கள் சரிவர வழங்குவதில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
எனவே, உத்தரமேரூர் ஒன்றியத்தில் சாலை பணியாளர்கள் பணியிடங்களை நிரப்ப வேண்டும். போதுமான பாதுகாப்பு கவசங்கள்மற்றும் உபகரண பொருட்கள் வழங்க வேண்டும் என, பணியாளர்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.