/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பாசி படர்ந்த மங்களதீர்த்தம் சீரமைக்க வலியுறுத்தல்
/
பாசி படர்ந்த மங்களதீர்த்தம் சீரமைக்க வலியுறுத்தல்
ADDED : மே 26, 2024 12:38 AM

காஞ்சிபுரம்:பெரிய காஞ்சிபுரத்தில் ஏகாம்பரநாதர் கோவில் அருகில் உள்ள, மங்களேஸ்வரர் கோவில் அருகில் மங்கள தீர்த்தம் குளம் உள்ளது. 2018ம் ஆண்டு சுற்றுலா துறை சார்பில், 'பிரசாத்' திட்டத்தின் கீழ், 11.85 லட்சம் ரூபாய் செலவில் இக்குளம் சீரமைக்கப்பட்டது.
இதில், குளத்தின் நடைபாதை, சுற்றுச்சுவருக்கு வர்ணம் பூசுதல், நுழைவு வாயில் மற்றும் அலங்கார வளைவு அமைத்தல் உள்ளிட்ட பணிகள் நடந்தன.
ஆனால், குளத்திற்கு மழைநீர் வரும் கால்வாய்களை முறையாக துார்வாரி சீரமைக்கவில்லை.
இதனால், காஞ்சிபுரத்தில் பல முறை பலத்த மழை பெய்தும் மங்களதீர்த்த குளம் முழுமையாக நிரம்பவில்லை. இந்நிலையில், குளத்தில் தேங்கியுள்ள நீர் பாசி படர்ந்த நிலையில் உள்ளது. மேலும், அவ்ழியாக செல்வோர் குளக்கரையை சிறுநீர் கழிக்கும் இடமாக பயன்படுத்துவதால், புனிதமான குளத்து நீர் மாசடைந்துள்ளது.
எனவே, பாசி படர்ந்த குளத்துநீரை அகற்றிவிட்டு, அப்பகுதியில் சிறுநீர் கழிக்காமல் இருப்பதற்கான தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளவும், குளத்திற்கு மழைநீர் வரும் அனைத்து வரத்து கால்வாய்களையும் முறையாக துார்வாரி சீரமைக்க வேண்டும் என, பக்தர்கள் வலியுறுத்தி உள்ளனர்.