/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பழுதடைந்த மின்மோட்டார் சீரமைக்க வலியுறுத்தல்
/
பழுதடைந்த மின்மோட்டார் சீரமைக்க வலியுறுத்தல்
ADDED : ஆக 02, 2024 02:20 AM

நரப்பாக்கம்:காஞ்சிபுரம் ஒன்றியம், நரப்பாக்கம் ஊராட்சி, மேட்டுப்பாளையம் காலனி, மாரியம்மன் கோவில் தெருவில் உள்ள வீடுகளுக்கு கூடுதல் குடிநீர் தேவைக்காக, 10 ஆண்டுகளுக்கு முன் சிறுமின்விசை குழாயுடன் குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டது.
அப்பகுதியினர் வீட்டு உபயோக தேவைக்கு குடிநீர் தொட்டி நீரை பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில், இரு மாதங்களுக்கு முன், ஆழ்துளை குழாயில் பொருத்தப்பட்டிருந்த மின்மோட்டார் பழுதடைந்தது.
இதனால், இப்பகுதியினர் கூடுதல் குடிநீர் தேவைக்கு வேறு பகுதியில் உள்ள குடிநீர் தொட்டி நீரை பயன்படுத்தி வருகின்றனர். குடிநீர் தொட்டியும் பயன்பாடின்றி வீணாகி வருகிறது.
எனவே, பழுதடைந்த மின்மோட்டாரை சீரமைத்து, குடிநீர் தொட்டியை பயன்பாட்டிற்கு கொண்டுவர ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, நரப்பாக்கம் பகுதியினர் வலியுறுத்தி உள்ளனர்.