/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
இரவில் 'குடி'மையமாக மாறிய ரேஷன் கடை சுற்றுச்சுவருடன் கேட் அமைக்க வலியுறுத்தல்

ADDED : ஏப் 12, 2024 10:37 PM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் ஒன்றியம், கருப்படிதட்டடை ஊராட்சியில், கீழம்பி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின், திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளில் மட்டும் இயங்கும் பகுதி நேர ரேஷன் கடை இயங்கி வருகிறது.
இக்கடையை சமூக விரோதிகள் சிலர், இரவு நேரத்தில் மது அருந்தும் மையமாக பயன்படுத்துகின்றனர். இதனால், காலி மதுபாட்டில், மது அருந்த பயன்படுத்திய காலி வாட்டர் பாட்டில், பிளாஸ்டிக் டம்ளர்களை ரேஷன் கடை வளாகத்திலேயே வீசி விட்டு செல்கின்றனர். இதனால், ரேஷன் கடைக்கு வரும் கார்டுதாரர்களும், ஊழியர்களும் முகம் சுளிக்கின்றனர்.
எனவே, கருப்படிதட்டடையில் இரவு நேரத்தில் போலீசார் ரோந்து வர வேண்டும். மேலும், ரேஷன் கடைக்கு சுற்றுச்சுவருடன், இரும்பு கேட் அமைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.