/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கீழ்கதிர்பூரில் திறந்தவெளி கிணறு கம்பி வலை அமைக்க வலியுறுத்தல்
/
கீழ்கதிர்பூரில் திறந்தவெளி கிணறு கம்பி வலை அமைக்க வலியுறுத்தல்
கீழ்கதிர்பூரில் திறந்தவெளி கிணறு கம்பி வலை அமைக்க வலியுறுத்தல்
கீழ்கதிர்பூரில் திறந்தவெளி கிணறு கம்பி வலை அமைக்க வலியுறுத்தல்
ADDED : மே 11, 2024 11:29 PM

கீழ்கதிர்பூர்:காஞ்சிபுரம் ஒன்றியம், கீழ்கதிர்பூர் ஊராட்சி, ஒற்றைவாடை தெருவில் சாலையோரம் பயன்பாட்டில் இல்லாத பாழடைந்த கிணறு ஒன்று உள்ளது. இந்த கிணற்றுக்கு, சுற்றுச்சுவர் உயரம் குறைவாக உள்ளதோடு, பாதுகாப்பு கம்பி வலையும் இல்லாமல், திறந்தவெளி கிணறாக உள்ளது,
இவ்வழியாக செல்லும் சிறுவர்கள் விளையாட்டுத்தனமாக கிணற்றை எட்டி பார்க்கும்போதோ, விளையாடும்போதோ தவறி கிணற்றில் விழுந்து விபத்தில் சிக்கும் சூழல் உள்ளது.
எனவே, சுற்றுச்சுவர் உயரம் குறைவாக உள்ள கிணற்றின் மீது, பாதுகாப்பு கம்பி வலை அமைக்க, கீழ்கதிர்பூர் ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.