/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
விண்ணப்பங்களுக்கான தெளிவுரை வழங்க தொழிலாளர் நல ஆணையர் அறிவுறுத்தல்
/
விண்ணப்பங்களுக்கான தெளிவுரை வழங்க தொழிலாளர் நல ஆணையர் அறிவுறுத்தல்
விண்ணப்பங்களுக்கான தெளிவுரை வழங்க தொழிலாளர் நல ஆணையர் அறிவுறுத்தல்
விண்ணப்பங்களுக்கான தெளிவுரை வழங்க தொழிலாளர் நல ஆணையர் அறிவுறுத்தல்
ADDED : செப் 14, 2024 07:25 PM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொழிலாளர் உதவி ஆணையர் சமூக பாதுகாப்பு திட்ட அலுவலகத்தில் தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் ஆலோசனை கூட்டம் காஞ்சிபுரம் சமூக பாதுகாப்பு திட்டம் தொழிலாளர் உதவி ஆணையர் லிங்கேஸ்வரன் தலைமையில் நடந்தது.
இதில், தொழிலாளர் துறை நிர்வாக கட்டுப்பாட்டின் கீழ் உள்ள 18 அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியங்கள் செயல்படுகின்றன. இதில், 15 நல வாரியங்களில் பதிவு பெற்ற தொழிலாளர்களுக்கு கல்வி, திருமணம், மகப்பேறு, கண் கண்ணாடி, இயற்கை மரணம், விபத்து மரணம், ஓய்வூதியம், குடும்ப ஓய்வதியம் உள்ளிட்ட நலத்திட்ட உதவித்தொகைகள் இலவசமாக வழங்கப்படுகின்றன.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் www.tnuwwb.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கப்டும் பதிவு புதுப்பித்தல் மற்றும் கேட்பு மனுக்கள் மீதாக குறைபாடுகளை சரி செய்து மீண்டும் விண்ணப்பிக்குமாறு குறுஞ்செய்தி, தொழிலாளர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இக்குறைபாட்டை சரி செய்யும் வகையில், 10 நாட்களுக்குள் தகுந்த ஆவணங்களை சமர்ப்பித்து தொழிலாளர்கள் பயன்பெறுமாறு தொழிற்சங்கத்தினருக்கு தொழிலாளர் உதவி ஆணையர் அறிவுறுத்தினார்.
எனவே, நலவாரியத்தில் பதிவு செய்துள்ள தொழிலாளர்கள் தங்களது விண்ணப்பங்களுக்கான தெளிவுரையை, நேரடியாகவோ தொலைபேசி வாயிலாகவோ, இணையவழி வாயிலாகவோ சரி செய்து அனுப்புமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
மேலும், தொழிலாளர்களுக்கு வீட்டு கட்டுவதற்காகன நிதி உதவி வழங்கும் திட்டத்தில் பெறப்படும் மனுக்களை உடனுக்குடன் பரிசீலனை செய்து நிதி உதவி வழங்க விரைந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு, அரசின் நலத்திட்ட உதவித்தொகைகள் பெற்று பயனடையுமாறு காஞ்சிபுரம் சமூக பாதுகாப்பு திட்ட தொழிலாளர் உதவி ஆணையர் லிங்கேஸ்வரன் தெரிவித்துள்ளார்.