/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
வெளிமாநில தொழிலாளர் விபரம் பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தல்
/
வெளிமாநில தொழிலாளர் விபரம் பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தல்
வெளிமாநில தொழிலாளர் விபரம் பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தல்
வெளிமாநில தொழிலாளர் விபரம் பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தல்
ADDED : மார் 04, 2025 09:01 PM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள நிறுவனங்களில் பணிபுரியும், வெளிமாநில தொழிலாளர்கள் குறித்த விபரங்களை இணைய வழி வாயிலாக பதிவேற்றம் செய்ய வேண்டும் என, காஞ்சிபுரம் தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, காஞ்சிபுரம் தொழிலாளர் உதவி ஆணையர் அமலாக்கம் சுதா வெளியிட்ட செய்திக்குறிப்பு:
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள நிறுவனங்களில், வெளிமாநில தொழிலாளர்கள் பணிபுரிந்தால், தொழிலாளர்கள் குறித்த தகவல்களை https://labour.tn.gov.in/ism என்ற இணைய வழி வாயிலாக பதிவேற்றம் செய்வது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.
மேற்படி அறிவிப்பானது பொதுமக்கள் மற்றும் வணிகர்களின் விழிப்புணர்வுக்காக வெளியிடப்படுகிறது என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.