/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
உத்திரமேரூரில் கரும்பு நடவுக்கு விதை ப்புல் வெட்டும் பணி தீவிரம்
/
உத்திரமேரூரில் கரும்பு நடவுக்கு விதை ப்புல் வெட்டும் பணி தீவிரம்
உத்திரமேரூரில் கரும்பு நடவுக்கு விதை ப்புல் வெட்டும் பணி தீவிரம்
உத்திரமேரூரில் கரும்பு நடவுக்கு விதை ப்புல் வெட்டும் பணி தீவிரம்
ADDED : ஆக 14, 2024 10:42 PM

உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியகிராமப் பகுதிகளில் விளைவிக்கும் கரும்புகள், மதுராந்தகம் அடுத்த, படாளம் கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு எடுத்துச் செல்கின்றனர். படாளம் கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு மதுராந்தகம், செங்கல்பட்டு, திருக்கழுக்குன்றம் உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்தும் கரும்பு விளைவித்து விவசாயிகள் அனுப்பி வைக்கின்றனர்.
கரும்பு சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு தரமான விதைக் கரும்புகளை தேவையான அளவு சர்க்கரை ஆலை நிர்வாகம் நேரடியாக விளைவித்து விவசாயிகளுக்கு வழங்க முடிவதில்லை எனக் கூறப்படுகிறது.
இதனால், பல விவசாயிகள் வெளியில் கரும்பு விதைப் புல்களை பெற்று கரும்பு சாகுபடிக்கு நடவு செய்கின்றனர். கரும்பாக்கம்,சீட்டணஞ்சேரி, அரும்புலியூர், சாத்தனஞ் சேரி உள்ளிட்ட பகுதிகளில் விதைப் புல்லுக்காகவே விவசாயிகள் கரும்பு சாகுபடி செய்கின்றனர்.
இதுகுறித்து, மிளகர்மேனி கிராம விவசாயிகள் கூறியதாவது,:
கரும்பு விதைப்புல் வாங்கும் விவசாயிகள், கரும்பு தோட்டத்திற்கு வந்து தாங்களே ஆட்கள் வைத்து தேவையான விதைக் கரும்புகளை துண்டுகளாக நறுக்கி சொந்த செலவில் எடுத்துச் செல்கின்றனர். இதனால், கரும்பு வெட்டும் ஆட்கள், கூலி மற்றும் வண்டி வாடகை செலவு மிச்சமாகிறது.
மேலும், விதைப்புல் வாங்கிச் செல்லும் விவசாயிகள் அதற்கான பணத்தை உடனடியாக தந்து விடுவதால், கரும்பு விதைப்புல் விற்பனை செய்வது கூடுதல் லாபம் அளிப்பதாக உள்ளது,
இவ்வாறு அவர்கள் கூறினர்.