/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
தேர்தல் விதிமுறைகளால் நின்ற தீர்மானங்கள் ஓட்டு எண்ணிக்கை முடிந்தவுடன் நிறைவேற்ற தீவிரம்

ADDED : மே 28, 2024 04:15 AM
காஞ்சிபுரம், லோக்சபா தேர்தலுக்கான நடத்தை விதிமுறைகள், கடந்த மார்ச் 16ல், தேர்தலுக்கான தேதி அறிவித்த அன்றைய தினமே அமலுக்கு வந்தது. அதுமுதல், தேர்தல் முடிந்து ஓட்டு எண்ணும் வரை தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும்.
தமிழகத்தில், கடந்த ஏப்.,19ல், தேர்தல் முடிந்து, ஓட்டு எண்ணிக்கைக்காக காத்திருக்கிறார்கள். தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால், காஞ்சிபுரம் மாவட்டத்தில், அரசு நிகழ்ச்சிகள், குறைதீர் கூட்டம், உள்ளாட்சி கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இதனால், உள்ளாட்சி அமைப்புகளில் புதிதாக தீர்மானம் நிறைவேற்றி நிதி ஒதுக்கீடு செய்ய முடியாத நிலை நீடிக்கிறது. ஜூன் 4ல், ஓட்டு எண்ணிக்கை நடைபெற உள்ளதால், விரைவில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் முடிவுக்கு வருகிறது.
எனவே, அடுத்த நாட்களில் மாநகராட்சி கூட்டம், நகராட்சி கூட்டம், பேரூராட்சி கூட்டம், ஒன்றியக் குழு கூட்டம், மாவட்ட ஊராட்சி குழு கூட்டம், ஊராட்சிகளில் வார்டு உறுப்பினர்கள் கூட்டம் ஆகியவை விரைந்து நடத்த ஏற்பாடு நடக்கிறது.
தேர்தல் காரணமாக, இரு மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்ட திட்டங்களுக்கு நுாற்றுக்கணக்கான தீர்மானங்கள் நிறைவேற்றி பணிகள் துவக்க திட்டமிட்டுள்ளனர்.
முன்னதாக, உள்ளாட்சி கூட்டம் நடத்த உள்ளனர். ஓட்டு எண்ணிக்கை முடிந்த உடனேயே, உள்ளாட்சிகளில் அந்தந்த ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி தலைவர்கள் தலைமையிலும், காஞ்சிபுரத்தில் மாநகராட்சி மேயர் தலைமையிலும் கூட்டம் நடைபெற உள்ளது. இதற்கு, அதிகாரிகள் இப்போதே பணிகள் மேற்கொள்கின்றனர்.