/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ஜெயலலிதா பிறந்த நாள் விழா இலவச கண் பரிசோதனை முகாம்
/
ஜெயலலிதா பிறந்த நாள் விழா இலவச கண் பரிசோதனை முகாம்
ஜெயலலிதா பிறந்த நாள் விழா இலவச கண் பரிசோதனை முகாம்
ஜெயலலிதா பிறந்த நாள் விழா இலவச கண் பரிசோதனை முகாம்
ADDED : பிப் 24, 2025 03:20 AM

குன்றத்துார்:குன்றத்துார் ஒன்றியம், நடுவீரப்பட்டு ஊராட்சி அ.தி.மு.க., சார்பில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாள் விழா, நேற்று நடந்தது.
இதில், குன்றத்துார் ஒன்றிய செயலரும், முன்னாள் ஸ்ரீபெரும்புதுார் எம்.எல்.ஏ.,வுமான கே.பழனி, காஞ்சிபுரம் மாவட்ட துணை செயலர் எஸ்.எம்.சுந்தர்ராஜன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றனர்.
அப்போது, நடுவீரப்பட்டு கிராமத்தில் உள்ள அனைத்து கிளைகளிலும் கழக கொடி ஏற்றி, கேக் வெட்டி, 300 பெண்களுக்கு சேலை மற்றும் அன்னதானம் வழங்கினர்.
இதைத்தொடர்ந்து, நடுவீரப்பட்டு பேருந்து நிலையத்தில், தனியார் மருத்துவமனையுடன் இணைந்து, இலவச கண் பரிசோதனை முகாமை துவக்கி வைத்தனர்.
இதில், அப்பகுதிவாசிகள் பங்கேற்று, கண் பரிசேதனை செய்து சிகிச்சை பெற்றனர். இதில், கட்சி நிர்வாகிகள் பாஸ்கரன், நல்லுார் பிரகாஷ், ரகுவரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

