/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
தொண்டை மண்டல ஆதீனத்திற்கு ஞானபீடாரோஹண விழா
/
தொண்டை மண்டல ஆதீனத்திற்கு ஞானபீடாரோஹண விழா
ADDED : ஏப் 28, 2024 01:23 AM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் தொண்டை மண்டல ஆதீனம் ஞானப்பிரகாச மடத்தின், 233வது மடாதிபதியாக ஞானபிரகாச பரமாச்சாரிய நடராஜ சுவாமிகள் இருந்து வந்தார். அவருக்கு, உடல் நல குறைவு ஏற்பட்டதால், தன் பதவியை ராஜினாமா செய்தார்.
இதையடுத்து, மடத்தின், 234வது மடாதிபதியாக மதுரை அடுத்த, சோழவந்தான் பகுதியைச் சேர்ந்த சண்முகசுந்தரம் - மீனாட்சி தம்பதியரின் இரண்டாவது மகன், நாகராஜ், 64. என்பவர், கடந்த பிப்., 7ல் மடாதிபதியாக பொறுப்பேற்றார்.
மடாதிபதியாக பொறுப்பேற்ற காஞ்சிபுரம் தொண்டை மண்டல ஆதீனம், 234வது பட்டம், சீலத்திரு சிதம்பரநாத ஞானப்பிரகாச தேசிக பரமாச்சாரிய சுவாமிகளுக்கு ஞானபீடாரோஹண விழா என அழைக்கப்படும், ஞானாசாரிய அபிஷேக விழா நேற்றுமுன்தினம் நடந்தது.
இதில், திருக்கயிலாய பரம்பரை தருமபுரம் ஆதீனம், 27வது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், தன் திருக்கரங்களால், காஞ்சி தொண்டை மண்டல ஆதீனத்திற்கு ஞானாசாரிய அபிஷேக விழா நடத்தி வைத்தார்.
விழாவையொட்டி, முன்னதாக ஓதுவா மூர்த்திகளின் திருமுறை விண்ணப்பம், மாகேசுவர பூஜை, திருமுறை இன்னிசை நிகழ்ச்சி நடந்தது.

