/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காஞ்சி தொகுதி வேட்புமனு 2வது நாளிலும் தாக்கல் இல்லை
/
காஞ்சி தொகுதி வேட்புமனு 2வது நாளிலும் தாக்கல் இல்லை
காஞ்சி தொகுதி வேட்புமனு 2வது நாளிலும் தாக்கல் இல்லை
காஞ்சி தொகுதி வேட்புமனு 2வது நாளிலும் தாக்கல் இல்லை
ADDED : மார் 21, 2024 11:06 AM
காஞ்சிபுரம்:தமிழகத்துக்கான லோக்சபா தேர்தல் முதற்கட்டமாக ஏப்., 19ல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல், 20ம் தேதி துவங்கியது.
முதல் நாளான நேற்று முன்தினம் வேட்பு மனு தாக்கல் செய்ய யாரும் வராத நிலையில், இரண்டாம் நாளான நேற்று, வேட்புமனு தாக்கல் செய்ய வேட்பாளர்கள் வருவர் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நேற்றும் வேட்புமனு தாக்கல் செய்ய யாரும் வரவில்லை.
காஞ்சிபுரம் தொகுதியில் போட்டியிட, தி.மு.க.,, - சுயேட்., - நாம் தமிழர், பகுஜன் சமாஜ் என, பல தரப்பினரும், 24 வேட்புமனுக்களை வாங்கி சென்றுள்ளனர்.
↓செங்கல்பட்டு கலெக்டர் அலுவலகத்தில், ஸ்ரீபெரும்புதுார் லோக்சபா தொகுதிக்கு வேட்பு மனு தாக்கல் செய்யும் பணி, நேற்று முன்தினம் துவங்கியது. முதல் நாள் யாரும் வேட்பு மனு தாக்கல் செய்ய வரவில்லை. இரண்டாவது நாளான நேற்றும், யாரும் வேட்பு மனு தாக்கல் செய்ய வரவில்லை.
ஆனால், தி.மு.க., - நாம் தமிழர், சுயேட்., என, 24 பேர் வேட்பு மனுக்கள் வாங்கி சென்றனர்.

