/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மதிப்பீட்டு குழுவிடம் ரூ.627 கோடி கேட்கும் காஞ்சி மாவட்ட நிர்வாகம்
/
மதிப்பீட்டு குழுவிடம் ரூ.627 கோடி கேட்கும் காஞ்சி மாவட்ட நிர்வாகம்
மதிப்பீட்டு குழுவிடம் ரூ.627 கோடி கேட்கும் காஞ்சி மாவட்ட நிர்வாகம்
மதிப்பீட்டு குழுவிடம் ரூ.627 கோடி கேட்கும் காஞ்சி மாவட்ட நிர்வாகம்
ADDED : செப் 13, 2024 08:34 PM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில், சட்டசபையின் மதிப்பீட்டு குழு, அதன் தலைவர் காந்திராஜன் தலைமையில், நேற்று முன்தினம் ஆய்வு செய்தது. காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் நடக்கும் திருப்பணி, நேரு மார்க்கெட் கட்டுமான பணி என, பல்வேறு வளர்ச்சி பணிகளை பார்வையிட்டது.
இதையடுத்து, அனைத்து துறை அதிகாரிகளுடன், கலெக்டர் அலுவலகத்தில், மதியம் 3:00 மணிக்கு ஆய்வு கூட்டம் நடந்தது. இதில், பல்வேறு திட்டங்களின் செயல்பாடு, முன்னேற்ற விபரங்கள், தணிக்கை விபரங்களை குழுவினர் கேட்டறிந்தனர்.
குறிப்பாக, காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு தேவையான வளர்ச்சி பணிகளுக்கு, அனைத்து துறையிலிருந்தும் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு, இக்குழுவிடம் மாவட்ட நிர்வாகம் அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளது.
அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு, 627 கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களுக்கு நிதி ஒதுக்க, தமிழக அரசுக்கு பரிந்துரை செய்ய மாவட்ட நிர்வாகம் கேட்டுக் கொண்டது.
காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் நிதி கேட்கும் திட்ட விபரங்கள்:
காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில், 9.32 கோடி ரூபாயில் புதிய சுற்றுலா மாளிகை, காஞ்சிபுரத்தில் பாதாள சாக்கடை திட்டத்தை 250 கோடி ரூபாய் கேட்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரத்தில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் மற்றும் நீதிபதி குடியிருப்புக்கு 276.4 கோடி மதிப்பீட்டில் கட்டுதல் உள்ளிட்ட திட்டங்களுக்கு, மொத்தம் 627 கோடி ரூபாய் நிதி கேட்கப்பட்டுள்ளது.