/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காஞ்சி அரசு அலுவலகங்கள் இருப்பிடம் தெரியாமல் குழப்பம்
/
காஞ்சி அரசு அலுவலகங்கள் இருப்பிடம் தெரியாமல் குழப்பம்
காஞ்சி அரசு அலுவலகங்கள் இருப்பிடம் தெரியாமல் குழப்பம்
காஞ்சி அரசு அலுவலகங்கள் இருப்பிடம் தெரியாமல் குழப்பம்
ADDED : மே 08, 2024 10:29 PM
காஞ்சிபுரம்,:காஞ்சிபுரம் கலெக்டர்வளாகத்திற்குள், கலெக்டர் அலுவலகம்,எஸ்.பி., அலுவலகம், வணிக வரித்துறை அலுவலகம், ஹிந்து சமய அறநிலையத் துறை உதவி இயக்குனர் அலுவலகம், நில அளவை உதவி இயக்குனர் அலுவலகம், கோட்டாட்சியர் அலுவலகம், உணவு பாதுகாப்புத்துறை அலுவலகம் இயங்கி வருகின்றன.
மேலும், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, வேலைவாய்ப்பு அலுவலகம், கருவூலம், மகளிர் காவல் நிலையம், தபால் அலுவலகம், முதன்மை கல்வி அலுவலகம், பொதுப்பணித்துறை அலுவலகம், மருத்துவ காப்பீடு பதிவு மையம், இ- - சேவை மையம் போன்ற அலுவலகங்கள் இயங்கி வருகின்றன.
கலெக்டர் வளாகத்திற்கு வருபவர்கள், இங்கு செயல்படும் அரசு அலுவலகங்கள் எங்கு செயல்படுகின்றன என்ற விபரம் தெரியாமல் அவதிப்படுகின்றனர்.
சமூக நலத்துறை அலுவலகத்திற்கு, அன்றாடம் பலர் வருகின்றனர். ஆனால், இந்த அலுவலகம் எங்கு செயல்படுகிறது என கலெக்டர் வளாகத்தில் எந்த தகவல் பலகையும் இல்லை.
எனவே, கலெக்டர் வளாகத்தில் இயங்கும், அனைத்து அலுவலகங்களும் எங்கு செயல்படுகின்றன என்ற முழு விபரம் அடங்கிய பதாகை வைக்க வேண்டும் என, பொதுமக்கள் பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.