/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மாநில சிலம்ப போட்டி பதக்கங்கள் குவித்த காஞ்சி
/
மாநில சிலம்ப போட்டி பதக்கங்கள் குவித்த காஞ்சி
ADDED : மே 07, 2024 04:07 AM
காஞ்சிபுரம் : தென்னிந்திய பாரம்பரிய சிலம்ப விளையாட்டு கழகம் சார்பில், மாநில அளவிலான சிலம்பம் போட்டி, ஸ்ரீபெரும்புதுாரில் நடந்தது.
இதில், தென்னிந்திய பாரம்பரிய சிலம்பம் விளையாட்டு கழக தலைவர் ரேணுகோபால் தலைமை வகித்தார். துணைத் தலைவர் மில்டன் முன்னிலை வகித்தார்.
இதில், தமிழகம் முழுதும் 17 மாவட்டங்களை சேர்ந்த சிலம்பம் பயிற்சி பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து, ஸ்ரீ மாருதி பாரம்பரிய சிலம்பம் அகாடமி சார்பில் ஆசான் கண்ணன் தலைமையில் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் போட்டியில் பங்கேற்றனர். இதில், ஒற்றை கம்பு, இரட்டை கம்பு, மான் கம்பு, சுருள்வாள் போட்டியில், 18 தங்கம், 36 வெள்ளி, 27 வெண்கலம் என, மொத்தம், 81 பதக்கங்கள் பெற்று காஞ்சிபுரம் மாவட்டம் முதலிடம் பிடித்தது.
காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் கண்ணன் போட்டிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.