/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காஞ்சி மருத்துவ சங்க குழுவினர் தி.மு.க., எம்.பி.,யிடம் கோரிக்கை மனு

ADDED : செப் 04, 2024 09:35 PM
காஞ்சிபுரம்:கோல்கட்டாவில் பெண் மருத்துவர் பாலியல் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்ததை தொடர்ந்து, புதுடில்லியிலுள்ள இந்திய மருத்துவ சங்க தேசிய தலைமை அலுவலகமும், சென்னையில் உள்ள தமிழ்நாடு மாநில தலைமை அலுவலகமும் நாடு முழுதும் உள்ள அனைத்து இந்திய மருத்துவ சங்க கிளை அமைப்புகளும் தங்கள் தொகுதி எம்.பி.,யை சந்தித்து இந்திய அளவிலான மருத்துவமனை பாதுகாப்பு சட்டம் இயற்றிட கோரிக்கை மனுவை அளிக்குமாறு அறிவுறுத்தியது.
அதன்படி, காஞ்சிபுரம் இந்திய மருத்துவ சங்க தலைவர் டாக்டர் சு.மனோகரன் தலைமையில், மதிப்புறு செயலர் டாக்டர் கா.சு.தன்யகுமார், இணை செயலர் டாக்டர் வெ. முத்துக்குமரன், மாநில குழு உறுப்பினர் டாக்டர் பி.டி.சரவணன், முன்னாள் பெண் மருத்துவர் பிரிவு தலைவர் டாக்டர் ஜி.லஷ்மி, மூத்த கண் மருத்துவர் டாக்டர் வி.எம். சங்கரன் உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் காஞ்சிபுரம் தி.மு.க., - எம்.பி.,செல்வத்தை, நேற்று நேரில் சந்தித்து கோரிக்கை மனுவை அளித்தனர்.
மேலும், காஞ்சிபுரத்தில் அரசு மருத்துவ கல்லூரி அமைய ஆவன செய்யுமாறு வலியுறுத்தினர்.