/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காஞ்சி எம்.பி., ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில் பிரசாரம்
/
காஞ்சி எம்.பி., ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில் பிரசாரம்
காஞ்சி எம்.பி., ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில் பிரசாரம்
காஞ்சி எம்.பி., ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில் பிரசாரம்
ADDED : மார் 25, 2024 05:29 AM
காஞ்சிபுரம் : தமிழகத்தில், லோக்சபா தேர்தல் ஓட்டுப்பதிவு ஏப்.,19ம் தேதி நடைபெற உள்ளது. தி.மு.க., வேட்பாளர் செல்வத்தின் ஆதரவாளர்கள், 'பேஸ் புக்' மற்றும் வாட்ஸாப் ஸ்டேட்டஸ் மூலமாக ஓட்டு சேகரித்து வருகின்றனர்.
இதில், காஞ்சிபுரத்திற்கு கூடுதல் மின்சார ரயில்கள் இயக்கம், சென்னை சென்ட்ரல், எழும்பூர் ஆகிய ரயில் நிலையங்களில் கூடுதல் நடைமேடைகள், அரக்கோணம் - காஞ்சிபுரம் - செங்கல்பட்டு இருவழி ரயில்பாதை ஏற்படுத்தி கொடுக்கப்படும் என, பிரசாரம் செய்து வருகின்றனர்.
ஏற்கனவே, அரக்கோணம் - காஞ்சிபுரம் - செங்கல்பட்டு இடையே, இருவழி ரயில் பாதை போடும் பணிக்கு, ரயில்வே நிர்வாகம் கணக்கெடுக்கும் பணி துவக்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.
இதுகூட தெரியாமல், தி.மு.க.,வினர் பிரசாரம் செய்து வருகின்றனர் என, அரசியல் விமர்சகர்கள் இடையே குற்றச்சாட்டு எழுந்துள்ளது.