/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காஞ்சிபுரம்: புகார் பெட்டி;அறுந்து தொங்கும் ஒயர்கள்
/
காஞ்சிபுரம்: புகார் பெட்டி;அறுந்து தொங்கும் ஒயர்கள்
காஞ்சிபுரம்: புகார் பெட்டி;அறுந்து தொங்கும் ஒயர்கள்
காஞ்சிபுரம்: புகார் பெட்டி;அறுந்து தொங்கும் ஒயர்கள்
ADDED : மே 02, 2024 01:02 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அறுந்து தொங்கும் ஒயர்கள்
காஞ்சிபுரம், காந்தி சாலையில், நடைபாதை ஓரம், தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களின், இணையதள இணைப்பிற்கான ஒயர்கள் செல்கின்றன. இவற்றை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் முறையாக பராமரிக்காததால்,நடைபாதை அருகில் குறுக்கும், நெடுக்குமாக செல்லும் ஒயர்கள் அறுந்து தொங்கிய நிலையில் உள்ளது.
இதில் மின்சாரம் உள்ளதா என, தெரியவில்லை. இதனால், இவ்வழியாக செல்வோர் அச்சத்துடன் சென்று வருகின்றனர். பொதுமக்கள் நடமாட்டம் உள்ள சாலையில், பாதசாரிகளுக்கு இடையூறாக உள்ள ஒயர்களை அப்புறப்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- சி.மணிகண்டன்,
காஞ்சிபுரம்.