/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காஞ்சிபுரம்:புகார் பெட்டி;தடுப்பின்றி கால்வாய்
/
காஞ்சிபுரம்:புகார் பெட்டி;தடுப்பின்றி கால்வாய்
ADDED : ஏப் 17, 2024 10:29 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தடுப்பின்றி கால்வாய்
காஞ்சிபுரம் - -செங்கல்பட்டு சாலையில், அய்யன்பேட்டை கிராமம் உள்ளது. இந்த கிராமத்தின் சாலையோரத்தில், பிரதான கழிவுநீர் கால்வாய் செல்கிறது.
இந்த கால்வாய் மீது, சிமென்ட் சிலாப் போடவில்லை. இதனால், அந்த சாலை வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி கால்வாயில் தவறிவிழும் சூழல் உள்ளது.
குறிப்பாக, காஞ்சிபுரம்- - செங்கல்பட்டு சாலை வழியாக, மோகாம்பரியம்மன் கோவில் அருகே, எதிரெதிரே வாகனங்கள் வரும் போது, சாலை ஓரமாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் கால்வாயில் தவறி விழும் நிலை உள்ளது. சாலையோரம் தடுப்பு அமைக்க நெடுஞ்சாலை துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- சு. நடராஜன், காஞ்சிபுரம்.

