/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காஞ்சிபுரம்: புகார் பெட்டி :மின்கம்பம் மாற்றப்படுமா
/
காஞ்சிபுரம்: புகார் பெட்டி :மின்கம்பம் மாற்றப்படுமா
காஞ்சிபுரம்: புகார் பெட்டி :மின்கம்பம் மாற்றப்படுமா
காஞ்சிபுரம்: புகார் பெட்டி :மின்கம்பம் மாற்றப்படுமா
UPDATED : செப் 04, 2024 11:35 PM
ADDED : செப் 04, 2024 11:34 PM

மின்கம்பம் மாற்றப்படுமா
உத்திரமேரூரில் இருந்து காக்கநல்லுார் செல்லும் சாலையின் இருபுறங்களிலும் உள்ள விவசாய நிலங்கள் மற்றும் வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்க சாலையோரம் மின்தட பாதைக்காக மின்கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இதில் ஒரு மின்கம்பத்தில் சிமென்ட் காரைகள் உதிர்ந்து கம்பிகள் வெளியே தெரியும் நிலையில் சிதிலமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது.
பலத்த காற்றுடன் மழை பெய்தால், மின்கம்பம் உடைந்து விழுந்தால், பெரிய அளவில் மின்விபத்து ஏற்படும் நிலை உள்ளதால், இவ்வழியாக செல்வோர் அச்சத்துடன் சென்று வருகின்றனர்.
எனவே, காக்கநல்லுார் சாலையில் சேதமடைந்துள்ள மின்கம்பத்தை அகற்றிவிட்டு புதிய மின்கம்பம் அமைக்க மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- என்.சரவணன்,
உத்திரமேரூர்.