ADDED : ஜூன் 25, 2024 05:35 AM

போக்குவரத்துக்கு இடையூறாக
சாலையோர முட்செடிகள்
சின்ன காஞ்சிபுரம், விஷ்ணு நகர், பிரதான சாலை வழியாக வரதராஜ பெருமாள் கோவில், டோல்கேட், நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், மிலிட்டரி சாலை, தேனம்பாக்கம் சிவாஸ்தானம் உள்ளிட்ட பகுதிக்கு செல்வோர் சென்று வருகின்றனர்.
வாகன போக்குவரத்து நிறைந்த இச்சாலையில், சீமைகருவேல முட்செடிகள் சாலையோரம் வளர்ந்துள்ளன.
இதனால், இச்சாலையில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் கனரக வாகனத்திற்கு வழிவிட ஒதுங்கும் போது, சீமைகருவேல மரத்தின் கூர்மையான முட்செடிகள் கண், முகம் உள்ளிட்ட பாகங்களை பதம் பார்த்துவிடும் சூழல் உள்ளது.
எனவே, போக்குவரத்துக்கு இடையூறாக, விஷ்ணு நகர் சாலையோரம் உள்ள முட்செடிகளை அகற்ற வேண்டும்.
- சி.மணிகண்டன்,
காஞ்சிபுரம்.
மண் அரிப்பால்
சாலையோரத்தில் பள்ளம்
காஞ்சிபுரம் பழைய ரயில் நிலையத்தில் இருந்து, வையாவூர் வழியாக ஏனாத்துார், களியனுார், முத்தியால்பேட்டை உள்ளிட்ட பகுதிக்கு செல்வோர் சென்று வருகின்றனர். வாகன போக்குவரத்து அதிகம் உள்ள இந்த சாலையில், வையாவூர் அருகில், சாலையின் குறுக்கே குடிநீர் குழாய் பதிக்கப்பட்டுள்ள இடத்தில், சாலையோரத்தில் மண் அரிப்பால் ஏற்பட்ட பள்ளம் உள்ளது.
இச்சாலையில் வேகமாக வரும் கனரக வாகன ஓட்டிகள் சாலையோரம் ஒதுங்கும்போது பள்ளத்தில் தவறி விழுந்து விபத்தில் சிக்கும் சூழல் உள்ளது. எனவே, சாலையோர பள்ளத்தை சீரமைக்க வேண்டும்.
- எஸ்.முத்துகுமார்,
சின்ன காஞ்சிபுரம்.