/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கார்கில் வெற்றி தினம் காஞ்சியில் அனுஷ்டிப்ப
/
கார்கில் வெற்றி தினம் காஞ்சியில் அனுஷ்டிப்ப
ADDED : ஜூலை 27, 2024 12:30 AM

காஞ்சிபுரம், ஜூலை 27-
கடந்த 1999ம் ஆண்டு கார்கில் பகுதியில் நடந்த இந்தியா - பாகிஸ்தான் போரில், இந்தியா வெற்றி பெற்றது. வரலாற்று சிறப்புமிக்க இந்நிகழ்வின் நினைவாக, 25வது ஆண்டு கார்கில் போர் வெற்றி தினம், காஞ்சிபுரத்தில் செயல்பட்டு வரும் ‛தியாகம் போற்றுவோம்' அமைப்பு சார்பில், பரந்துார் அரசு மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர் பொய்யாமொழி தலைமையில் நடந்தது.
பள்ளி வளாகத்தில் ‛அமர்ஜவான்' எனப்படும் ‛அழியாவீரர் நினைவு சின்னம்' அமைக்கப்பட்டு மாணவ - மாணவியர் மலர் தூவி மரியாதை செலுத்தியதுடன், மவுன அஞ்சலியும் செலுத்தினர்.
கார்கில் போரில் இந்திய ராணுவ வீரர்கள் தன் உயிரையும் பொருட்படுத்தாமல் போராடி இந்தியாவை வெற்ற பெறச் செய்த தியாகம் குறித்து, பள்ளி மாணவர்களுக்கு விளக்கப்பட்டது.
கார்கில் போர் நினைவு தினம் அனுஷ்டிப்பு தொடர்பாக ஓவியம் மற்றும் கட்டுரை போட்டி நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டன.
அதேபோல, பிச்சிவாக்கம் அரசு பள்ளியில், தலைமை ஆசிரியை சாந்தி தலைமையில் நிகழ்ச்சி நடந்தது.