/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கற்பக விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் விமரிசை
/
கற்பக விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் விமரிசை
ADDED : ஆக 24, 2024 12:28 AM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் ஒன்றியம், காவாந்தண்டலம் கிராமத்தில் கற்பக விநாயகர் மற்றும் வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணியர் கோவில் உள்ளது. இக்கோவிலை புதுப்பித்து கும்பாபிஷேகம் நடத்த பக்தர்கள் வலியுறுத்தி வந்தனர். இதையடுத்து, ஹிந்து சமய அறநிலையத் துறை சார்பில், 8 லட்சம் ரூபாய் செலவில் பல்வேறு திருப்பணிகளுடன் சமீபத்தில் கோவில் புதுப்பிக்கப்பட்டது.
கும்பாபிஷேகத்தையொட்டி, கடந்த 21ம் தேதி, காலை 9:00 மணிக்கு, விக்னேஸ்வர பூஜையுடன் யாகசாலை பூஜை துவங்கியது.
நேற்று, காலை 9:15 மணிக்கு, கோவில் கோபுர விமான கலசத்திற்கும், தொடர்ந்து மூலவருக்கும் புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தி வைக்கப்பட்டது. பிற்பகல் 12:00 மணிக்கு மஹா அபிஷேகமும், இரவு 7:00 மணிக்கு கற்பக விநாயகர் வீதியுலாவும் நடந்தது.
விழாவிற்கான ஏற்பாட்டை கோவில் செயல் அலுவலர் கதிரவன் உட்பட பலர் இணைந்து செய்திருந்தனர்.