/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சேந்தமங்கலத்தில் நாளை கும்பாபிஷேகம்
/
சேந்தமங்கலத்தில் நாளை கும்பாபிஷேகம்
ADDED : ஜூலை 05, 2024 09:55 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேந்தமங்கலம்:காஞ்சிபுரம் அடுத்த ராணிப்பேட்டை மாவட்டம், பின்னாவரம் ஊராட்சியில், சேந்தமங்கலம் துணை கிராமம் உள்ளது.
இங்கு, சுந்தர விநாயகர் கோவில் மற்றும் ராதா, ருக்மணி சமேத வேணுகோபால சுவாமி கோவில்கள் புதுப்பிக்கப்பட்டு உள்ளன. இதில், வள்ளி, தேவசேனா சமேத பாலகிருஷ்ணர், மகாவிஷ்ணு, துர்க்கை ஆகிய பரிவார சன்னிதிகள் உள்ளன.
இக்கோவிலில், நாளை காலை 9:00 மணி முதல் 10:30 மணிக்கு பூச நட்சத்திர தினத்தன்று மஹா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.