/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பாடலீஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகம் விமரிசை
/
பாடலீஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகம் விமரிசை
ADDED : செப் 17, 2024 06:27 AM

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் தேனம்பாக்கம் பாலாற்றங்கரையில் காமாட்சி அம்பாள் சமேத பாடலீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் பரிவார சன்னிதி அமைத்து, பல்வேறு திருப்பணிகள் சமீபத்தில் செய்து முடிக்கப்பட்டன.
கும்பாபிஷேகத்தையொட்டி, கடந்த 14ம் தேதி, காலை 8:30 மணிக்கு விக்னேஸ்வர பூஜையுடன் யாகசாலை பூஜை துவங்கியது.
இந்நிலையில், நேற்று, காலை 9:45 மணிக்கு, கோவில் கோபுர விமான கலசத்திற்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.
தொடர்ந்து விநாயகர்,முருகர், நால்வர், பைரவர், மஹா பெரியவர் மற்றும் காமாட்சி அம்பாள் சமேத பாடலீஸ்வரருக்கு கும்பாபிஷேகம் நடத்தி வைக்கப்பட்டது.
தொடர்ந்து மஹா அபிஷேகமும், மஹா தீபாராதனையும், பக்தர்களுக்கு பிரசாத வினியோகமும் செய்யப்பட்டது.

