நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீபெரும்புதூர்:ஸ்ரீபெரும்புதூர் அடுத்த கிளாய் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வகுமார், 27; பிரபல ரவுடி குல்லாவின் கூட்டாளியான செல்வகுமார் மீது, ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலையத்தில் கொலை, கொலை முயற்சி, ஆள் கடத்தல் உள்ளிட்ட பல வழக்குகள் உள்ளன.
கடந்த வாரம் வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்ட செல்வகுமார், புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செல்வகுமார் செயல்பட்டு வருவதால், அவரை குண்டர் தடுப்பு காவலில் சிறையில் அடைக்க, மாவட்ட கலெக்டர் கலைச்செல்விக்கு, எஸ்.பி., சண்முகம் பரிந்துரை செய்தார்.
அதன்படி, செல்வகுமாரை குண்டர் தடுப்பு சட்டத்தில் ஓராண்டு சிறையில் அடைக்க, மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி உத்தவிட்டார். அதற்கான ஆணை சிறைத்துறை அதிகாரிகளிடம் வழங்கப்பட்டுள்ளது.

