ADDED : ஆக 29, 2024 08:38 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம், செட்டிக்குளம் பள்ளத் தெருவைச் சேர்ந்தவர் செல்வம் மகன் உதயா, 19; இவர், மீது கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.
சிவ காஞ்சி போலீசார் சமீபத்தில் இவரை கைது செய்து, வேலுார் சிறையில் அடைத்தனர். தொடர்ந்து குற்ற செயல்களில் இவர் ஈடுபடுவதால், இவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய, எஸ்.பி., சண்முகம், கலெக்டருக்கு பரிந்துரை செய்தார்.
காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி உத்தரவின்படி, உதயாவை குண்டர் சட்டத்தில் போலீசார் கைது செய்தனர். வேலுார் சிறையில் உள்ள அவரிடம் உத்தரவு நகலை போலீசார் வழங்கினர்.

