ADDED : ஆக 24, 2024 09:59 PM
வாலாஜாபாத்,:வாலாஜாபாத் பேரூராட்சிக்கு உட்பட்ட சின்னகடை பகுதியைச் சேர்ந்தவர்கள் மணிகண்டன், 23, சூர்யா, 20; சகோதரர்கள் இருவரும் கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்ற சம்பவங்களில் ஈடுபட்டதாக வாலாஜாபாத் போலீசார் ஏற்கனவே வழக்கு பதிந்து அவர்கள் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் மீது குற்ற சம்பவங்கள் தொடர்பாக தொடர்ந்து புகார் எழும்பியதையடுத்து, அவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய; காஞ்சிபுரம் மாவட்ட எஸ்.பி., சண்முகம், காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்விக்கு பரிந்துரை செய்தார்.
அதை ஏற்று சகோதரர்கள் இருவரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் கலைச்செல்வி உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து, வேலூர் சிறை அதிகாரிகளுக்கு, சிறையில் உள்ள சகோதரர்கள் இருவரும் குண்டர் சட்டத்தில் கைது செய்ததற்கான அறிவிப்பு ஆணையை வாலாஜாபாத் போலீசார் வழங்கி உள்ளனர்.