/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
எம்.எல்.ஏ.,வுக்காக காத்திருக்கும் லிங்காபுரம் புதிய அங்கன்வாடி மையம்

ADDED : ஆக 18, 2024 11:54 PM

வாலாஜாபாத் : வாலாஜாபாத் ஒன்றியம், பழையசீவரம் ஊராட்சிக்கு உட்பட்டது லிங்காபுரம் கிராமம். இக்கிராம அங்கன்வாடி மையத்தில், 27 குழந்தைகள் பயில்கின்றனர். இந்த அங்கன்வாடி மையத்திற்கான கட்டடம் மிகவும் பழுதடைந்ததை அடுத்து அக்கட்டடம் கைவிடப்பட்டது.
இதையடுத்து, லிங்காபுரம் அடுத்த நல்லூரில் உள்ள அங்கன்வாடி மையத்தில் தற்போது இப்பகுதி குழந்தைகள் பயில்கின்றனர்.
இதனிடையே, லிங்காபுரத்தில் பயன்பாடு இல்லாத பழைய கட்டடத்தை இடித்து அப்புறப்படுத்திவிட்டு, அதே இடத்தில் ஊராட்சி கனிமவள நிதியின் கீழ், 13 லட்சம் ரூபாய் செலவில் புதிய அங்கன்வாடி மையம் கட்டப்பட்டது.
தற்போது அக்கட்டடத்திற்கான பணி முழுமையாக நிறைவு பெற்றும் பயன்பாட்டுக்கு வராமல் எம்.எல்.ஏ.,வுக்காக காத்திருக்கிறது. இதனால், லிங்காபுரம் கிராம குழந்தைகள், ஒரு கி.மீ., தூரத்தில் உள்ள நல்லூர் பகுதி அங்கன்வாடி மையத்திற்கு செல்லும் நிலை தொடர்கிறது.
எனவே, லிங்காபுரத்தில் உள்ள புதிய அங்கன்வாடி மையத்தை திறந்து பயன்பாட்டுக்கு கொண்டு வர அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.