/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
புண்ணியகோட்டீஸ்வரர் கோவிலில் வரும் 19ல் மஹா கும்பாபிஷேகம்
/
புண்ணியகோட்டீஸ்வரர் கோவிலில் வரும் 19ல் மஹா கும்பாபிஷேகம்
புண்ணியகோட்டீஸ்வரர் கோவிலில் வரும் 19ல் மஹா கும்பாபிஷேகம்
புண்ணியகோட்டீஸ்வரர் கோவிலில் வரும் 19ல் மஹா கும்பாபிஷேகம்
ADDED : மே 11, 2024 09:35 PM
காஞ்சிபுரம்:சின்னகாஞ்சிபுரத்தில், தர்மவர்த்தினி சமேத புண்ணியகோட்டீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலை புதுப்பித்து கும்பாபிஷேகம் நடத்த கோவில் நிர்வாகிகள் முடிவு செய்தனர். அதன்படி கோவிலில் பல்வேறு திருப்பணிகள் செய்யப்பட்டுள்ளன.
கும்பாபிஷேகத்தையொட்டி வரும் 13ம் தேதி, மாலை 6:00 மணிக்கு கணபதி பிரார்த்தனை, கோபூஜை உள்ளிட்டவை நடக்கிறது. வரும் 16ம் தேதி மாலை 4:00 மணிக்கு ஆச்சார்ய, ரித்விக் வர்ணம், யாத்ரா ஹோமம் துவங்குகிறது.
வரும் 19ம் தேதி, காலை 6:30 மணிக்கு விமானங்களுக்கும், தொடர்ந்து மூலாலயங்களுக்கும் புனிதநீர் ஊற்றப்பட்டு மஹா கும்பாபிஷேகம் நடைபெறுகிறுது. காலை 8:00 மணிக்கு பக்தர்களுக்கு தீர்த்த பிரசாதமும், 11:00 மணிக்கு மஹா அபிஷேகமும், மாலை 6:00 மணிக்கு திருக்கல்யாண வீதியுலா நடைபெறுகிறது.