/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ஓட்டுனர் அறையில் நுழைந்து மொபைல் திருடியவர் கைது
/
ஓட்டுனர் அறையில் நுழைந்து மொபைல் திருடியவர் கைது
ADDED : பிப் 27, 2025 12:39 AM

ஸ்ரீபெரும்புதுார்:திருவாரூர் மாவட்டம், முள்ளிவாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் சதீஷ், 29, ஒரகடம் சூர்யதேவி காம்ப்ளக்ஸில் தங்கி, அதே பகுதியில் உள்ள தனியார் டிராவல்ஸில் ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார்.
நேற்று முன்தினம் இரவு, அறையில் தனியாக சதீஷ் துாங்கி கொண்டிருந்த போது, அறையில் நுழைந்த மர்ம நபர், சதீஷின் மொபைல் போனை திருடி விட்டு, பின் கதவை வெளிபுறமாக தாளிட்டு அங்கிருந்து தப்பியோடினார்.
சத்தம் கேட்டு எழுந்த சதீஷ் கதவை திறக்க முடியாமல் கூச்சலிட்டார். அப்போது, அங்கு வந்த மற்றொரு ஓட்டுனர், கதவை திறந்தார். பின், இருவரும் மர்மநபரை துரத்தி பிடித்து, ஒரகடம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
விசாரணையில், சென்னை நங்கநல்லுாரைச் சேர்ந்த பாலாஜி என்பது தெரிந்தது. அவரை கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

