/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மாரியம்மன் கோவிலில் மண்டலாபிஷேக நிறைவு
/
மாரியம்மன் கோவிலில் மண்டலாபிஷேக நிறைவு
ADDED : ஆக 30, 2024 01:08 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்:உத்திரமேரூர் பஜார் வீதியில் நடுத்தெரு மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம், கடந்த மாதம் 12ம் தேதி விமரிசையாக நடந்தது.
கும்பாபிஷேகத்தை தொடர்ந்து தினமும் மாலையில், மண்டலாபிஷேகம் நடந்து வந்தது. இதில், நேற்று, மண்டலாபிஷேக நிறைவு விழா நடந்தது. விழாவை முன்னிட்டு கோவில் வளாகத்தில் யாக வேள்வி பூஜைகள் நடந்தன.
தொடர்ந்து வேத விற்பன்னர்கள் மந்திரங்கள் ஓத மேளதாளம் முழுங்க அம்மனுக்கு 108 சங்காபிஷேகம் நடந்தது.
பின், அம்மனுக்கு பல்வேறு சிறப்பு அபிஷேகம், மஹா தீபாரானையை தொடர்ந்து, மலர் அலங்காரத்தில் மூலவர் அம்மன் அருள்பாலித்தர்.