ADDED : மார் 13, 2025 10:21 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம், மருதம் கிராமத்தில், அரசு நடுநிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில், 58-வது ஆண்டு விழாநடந்தது.
பள்ளி தலைமையாசிரியர் கலைவாணி தலைமை தாங்கினார். வட்டார கல்வி அலுவலர்கள் நாராயணசாமி, ரூபி ஞான தீபம் முன்னிலை வகித்தனர்.
அதில், பங்கேற்ற பள்ளி மாணவ - மாணவியர் பெண் கல்வி, இல்லம் தேடி கல்வி ஆகியவற்றின் முக்கியத்துவம் குறித்து, நாடகங்கள் வாயிலாக நடித்து காட்டினர்.
தொடர்ந்து, கலை நிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்ற மாணவ - மாணவியருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. உள்ளாட்சி பிரதிநிதிகள், ஆசிரியர்கள் மற்றும்மாணவர்கள் பங்கேற்றனர்.