/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மருத்துவ விழிப்புணர்வு கருத்தரங்கம்
/
மருத்துவ விழிப்புணர்வு கருத்தரங்கம்
ADDED : ஏப் 28, 2024 01:25 AM
காஞ்சிபுரம்:தமிழ்நாடு புற்றுநோய் உயர் அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கம் சார்பில், இளநிலை மருத்துவ படிப்பு பயிலும் மாணவர்களுக்கான புற்றுநோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு கருத்தரங்கம் காஞ்சிபுரம் மீனாட்சி மருத்துவ கல்லுாரியில் நேற்று நடந்தது.
தமிழ்நாடு புற்றுநோய் உயர் அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கம் செயலரும், புற்றுநோய் மருத்துவ நிபுணருமான டாக்டர் அய்யப்பன் நிகழ்ச்சியை வழி நடத்தினார். மருத்துவ கல்லூரி டீன், முதல்வர் டாக்டர் ராஜசேகர் தலைமை வகித்தார்.
துணை முதல்வர் டாக்டர் ஈஸ்வரி நிகழ்ச்சிக்கான ஏற்பாடு செய்திருந்தார். கண்காணிப்பாளர் டாக்டர் பூபதி, இந்திய மருத்துவ சங்கம், காஞ்சி கிளை தலைவர் டாக்டர் மனோகரன், அரசு அறிஞர் அண்ணா நினைவு புற்றுநோய் மருத்துவமனை இயக்குனர் டாக்டர் சரவணன், 800க்கும் மேற்பட்ட மருத்துவ மாணவர்கள், 100க்கும் மேற்பட்ட டாக்டர்கள் பங்கேற்றனர்.
கல்வி நிகழ்ச்சியை காஞ்சிபுரம் புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் பாலமுருகன் ஒருங்கிணைத்தார்.

